01 ஜனவரி 2012

புத்தாண்டில் புதிய சபதமேற்போம் !

                                        புத்தாண்டை வரவேற்போம் !
 புதிய சிந்தனைகளுடன் , புதிய முயற்சிகளுடன்  புத்தாண்டை வரவேற்போம்!

                      ஆங்கில புத்தாண்டோ , தமிழ் புத்தாண்டோ நமது பிறந்த நாள் போல வருடந்தோறும் வருகிறது .சிலர் சில விசயங்களில்  புத்தாண்டு சபதம் ஏற்பார்கள்.அதை நடைமுறைப் படுத்தவும் முயற்சிப்பார்கள் .சிலர் அதில் வெற்றியும் காண்பார்கள் .சிலர் சபதம் எடுப்பதோடு சரி .பிறகு அதை மறந்தே போய் விடுவார்கள் .திரும்பவும் அடுத்த புத்தாண்டு வரும் .புதிதாக சபதம் ஏற்பார்கள்.
                          சிலர் இதுபோன்ற   வம்பு தும்புக்கெல்லாம் போவதேயில்லை .புத்தாண்டை கொண்டாடுவதோடு சரி.எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது அவரவர் பொருளாதார வசதியைப் பொறுத்து அமைகிறது.
                     நண்பர்களுடன் , நண்பிகளுடன் குடித்து கும்மாளமிட்டு  நள்ளிரவில்   அலம்பல் செய்கிறவர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஆ , ஊ என்று கூச்சலிடுகின்றனர் .தாறுமாறாக சாலைகளில் பைக்குகளிலும் , கார்களிலும் பறக்கின்றனர் .என்னதான் காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்தாலும் அவைகளை மீறுவதையே ஆண்மை என நினைக்கின்றனர் .நள்ளிரவில் கோவில்களுக்கும் , தேவாலயங்களுக்கும் வழிபட செல்வோர் இது போன்றவர்களால் மிகவும் அருவருப்படைகின்றனர் .மேலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்  .
                     புத்தாண்டு கொண்டாட்டம் என்பதே நம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் வரை இல்லாத ஒன்று . தாராளமயமாக்கல் வந்த பிறகுதான் மேற்கத்திய கலாசாரத்தின் பாதிப்பு நம் நாட்டில் மிகவும் அதிகமாகி விட்டது.நள்ளிரவு பார்ட்டிகளும் அதிகரித்து விட்டன.
                   முன்பெல்லாம் புத்தாண்டு மற்றும் பண்டிகைகளுக்கு வாழ்த்து மடல்கள் அனுப்புகின்ற நல்ல பழக்கம் நம்மிடையே  இருந்தது.வாழ்த்து அட்டைகள் விற்பனை கொடிகட்டி பறந்தன .ஆனால் இப்போது வாழ்த்து மடல் அனுப்புகின்றவர்கள் மிகவும் அருகி விட்டனர் .வாழ்த்துக்களை கைபேசி , தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவே பரிமாறிக் கொள்கின்றனர் .அதுவும் முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பி வெறுப்பு ஏற்றுகின்றனர் .அதிலே ஒரு அற்ப சந்தோசம் அடைகின்றனர் .
                இந்த புத்தாண்டிலிருந்து ஒரு புதிய சபதம் செய்யலாமே !   நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே  வாழ்த்துக்களை தெரிவித்து மகிழலாமே ! மீண்டும் வாழ்த்து மடல்களை அனுப்ப ஆரம்பிக்கலாமே!வாழ்த்து அட்டைகள் தயாரிப்பில் ஈடுபடும் ஏழைகளை வாழவைக்கலாமே ! கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்தலாமே! செய்யலாமா நண்பர்களே !

      தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

29 டிசம்பர் 2011

மருத்துவம்-நமது உடல் பற்றிய குறிப்புகள்


ரத்தம் :மனித ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடு அதிகமாகி மூச்சுத்  திணறும்போது சிவப்பு ரத்தம் நீல நிறமாக மாறும்.

செல்கள்: நமது உடலில் செல்கள் மிகவும் சிறியவை.இரண்டு லட்சம் செல்களை  ஒரு குண்டுசியில் குத்திக்   கொள்ளலாம் .

சிறுநீரகக்  கற்கள் :  சிறுநீரகக் கற்களில் பெரும்பான்மையானவை    கால்சியம் ஆக்சாலேட் கற்களாகவே உள்ளன .இது தவிர யூரிக் ஆசிட் கற்களும் கணிசமான அளவில்  உள்ளன.

ரத்த அழுத்தம் :  தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிட்டு வருவதால் ரத்த ஓட்டம் சீராகி ,அழுத்தம் குறைந்து விடும் .சாக்லேட்டில் உள்ள "ப்லேவனாய்ட்" என்ற  ரசாயனப் பொருள் அடைபடும் ரத்த தமனிகளை திறக்க செய்வதில் சிறப்பாக செயல் படுகிறது .அடைபட்டிருக்கும் ரத்தம் இளகி சீராக ஓடுவதற்கு அது ஊக்குவிக்கிறது .
                        
        


 






    




 







தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

28 டிசம்பர் 2011

துளசியின் மருத்துவ பயன்கள்


1.துளசி இலைகளைத்  தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது.ஜிரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலைகள் மூலம் பெறலாம்.வாய்  துர்நாற்றத்தைப்  போக்கும்.நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம்

2. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

3.வியர்வை நாற்றத்தை  தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே  கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்
.
4.துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி , படை  சிரங்குகள் கூட மறைந்துவிடும்.

5.துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீ ர்க்கோளாறு மறையும் .

6.துளசி சாற்றுடன் எலுமிச்சசை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

7.சுத்தமான மண்பானைத் தண்ணீரில் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத்  தண்ணீரை குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது .


8. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பல நோய் களிலிருந்து காக்கிறது .

9.வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும் ,


10.வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டை சுற்றிலும் துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள், பூச்சிகள், பாம்புகள் முதலியன வராது (இதனால்தான் வீடுகளில் துளசிமாடம் வைத்து துளசி செடிகளை வளர்க்கிறார்களோ !)  -----நன்றி  தினமணி

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

22 டிசம்பர் 2011

ஆன்மிக கருத்துகள்

1 . கடமைகளை ஆற்றாமல்  அவற்றின் பயன்களை
     அனுபவிப்பவன் திருடன்.
2. பகவானுக்கு கர்மங்களே  கிடையாது .ஆயினும் அவரும்
     உலகிற்கு வழிகாட்டியாக   கர்மங்களை  ஆற்றுகிறார்
3 .கர்மங்கள் அனைத்தின் பயன்களையும் துறப்பதே தியாகம் ஆகும்.
                                                                                            -- பகவத் கீதை 
 



தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

17 டிசம்பர் 2011

புதிய பூ இது

நண்பர் நிஜாம் அவர்களின் ஆலோசனையின் படி புதிய வலைப்பூ தொடங்கியுள்ளேன் .அன்பர்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும்  வழங்கிடுமாறு வேண்டுகிறேன்   

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!