01 ஜனவரி 2012

புத்தாண்டில் புதிய சபதமேற்போம் !

                                        புத்தாண்டை வரவேற்போம் !
 புதிய சிந்தனைகளுடன் , புதிய முயற்சிகளுடன்  புத்தாண்டை வரவேற்போம்!

                      ஆங்கில புத்தாண்டோ , தமிழ் புத்தாண்டோ நமது பிறந்த நாள் போல வருடந்தோறும் வருகிறது .சிலர் சில விசயங்களில்  புத்தாண்டு சபதம் ஏற்பார்கள்.அதை நடைமுறைப் படுத்தவும் முயற்சிப்பார்கள் .சிலர் அதில் வெற்றியும் காண்பார்கள் .சிலர் சபதம் எடுப்பதோடு சரி .பிறகு அதை மறந்தே போய் விடுவார்கள் .திரும்பவும் அடுத்த புத்தாண்டு வரும் .புதிதாக சபதம் ஏற்பார்கள்.
                          சிலர் இதுபோன்ற   வம்பு தும்புக்கெல்லாம் போவதேயில்லை .புத்தாண்டை கொண்டாடுவதோடு சரி.எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது அவரவர் பொருளாதார வசதியைப் பொறுத்து அமைகிறது.
                     நண்பர்களுடன் , நண்பிகளுடன் குடித்து கும்மாளமிட்டு  நள்ளிரவில்   அலம்பல் செய்கிறவர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.ஆ , ஊ என்று கூச்சலிடுகின்றனர் .தாறுமாறாக சாலைகளில் பைக்குகளிலும் , கார்களிலும் பறக்கின்றனர் .என்னதான் காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்தாலும் அவைகளை மீறுவதையே ஆண்மை என நினைக்கின்றனர் .நள்ளிரவில் கோவில்களுக்கும் , தேவாலயங்களுக்கும் வழிபட செல்வோர் இது போன்றவர்களால் மிகவும் அருவருப்படைகின்றனர் .மேலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்  .
                     புத்தாண்டு கொண்டாட்டம் என்பதே நம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் வரை இல்லாத ஒன்று . தாராளமயமாக்கல் வந்த பிறகுதான் மேற்கத்திய கலாசாரத்தின் பாதிப்பு நம் நாட்டில் மிகவும் அதிகமாகி விட்டது.நள்ளிரவு பார்ட்டிகளும் அதிகரித்து விட்டன.
                   முன்பெல்லாம் புத்தாண்டு மற்றும் பண்டிகைகளுக்கு வாழ்த்து மடல்கள் அனுப்புகின்ற நல்ல பழக்கம் நம்மிடையே  இருந்தது.வாழ்த்து அட்டைகள் விற்பனை கொடிகட்டி பறந்தன .ஆனால் இப்போது வாழ்த்து மடல் அனுப்புகின்றவர்கள் மிகவும் அருகி விட்டனர் .வாழ்த்துக்களை கைபேசி , தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவே பரிமாறிக் கொள்கின்றனர் .அதுவும் முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கெல்லாம் குறுஞ்செய்தி அனுப்பி வெறுப்பு ஏற்றுகின்றனர் .அதிலே ஒரு அற்ப சந்தோசம் அடைகின்றனர் .
                இந்த புத்தாண்டிலிருந்து ஒரு புதிய சபதம் செய்யலாமே !   நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மட்டுமே  வாழ்த்துக்களை தெரிவித்து மகிழலாமே ! மீண்டும் வாழ்த்து மடல்களை அனுப்ப ஆரம்பிக்கலாமே!வாழ்த்து அட்டைகள் தயாரிப்பில் ஈடுபடும் ஏழைகளை வாழவைக்கலாமே ! கலாச்சார சீரழிவுகளை தடுத்து நிறுத்தலாமே! செய்யலாமா நண்பர்களே !

      தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

3 கருத்துகள்:

  1. வாழ்த்து அட்டைமூலம் வாழ்த்து சொல்லலாம் என்கிற தங்கள் ஆலோ(யோ)சனை நியாயமானதே! ஃபாலோவர்ஸ் விட்ஜெட் இணைக்கலையா?

    பதிலளிநீக்கு
  2. 'நச்'சுனு சொன்னீங்கள். தொடருங்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு