18 ஜனவரி 2012

தெரிந்ததும் தெரியாததும்

 
சந்திரரே,சூரியரே!
1.  சூரியன் உதிக்கிறது என்பதும், சூரியன் மறைகிறது என்பதும்  வெறும் மாயை. தினசரி சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பதையும் நாம் பள்ளிப்பாடத்தில் படித்துள்ளோம்.அவ்வாறு பூமி சூரியனை சுற்றி வருவதால் தான் இரவு பகல் உண்டாகிறது. அப்பொழுது சூரியன் உதிப்பது போலவும், மறைவது போலவும் நமக்கு காட்சியளிக்கிறது. மற்றபடி, சூரியனிடம் தினசரி எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
2.  சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருந்தால்         அது சூரிய கிரகணம்.பூமிக்கு இருபுறமும் சந்திரன் சூரியன் இருந்தால் அது சந்திர கிரகணம்.
3.    லூனார் மாதம் என்பது ஒரு முழு நிலவுக்கும் அடுத்த முழு நிலவுக்கும் இடைப்பட்ட நாட்கள். அதாவது (29 1/2) நாட்கள் ஆகும்.
4.  மரங்கள் இலைகள் மூலம் சூரிய ஒளியை உள்வாங்கும் தன்மை உடையவை.அந்த ஆற்றலைப் பயன்படுத்தி தனக்குத் தேவையான உணவை தயார் செய்கின்றன.அதேபோல, செயற்கை சூரிய மரங்கள் மூலம் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றமுடியும். அதற்கு இரும்பு மரத்திலான தூணைப் பயன்படுத்தி இலைகளுக்குப் பதிலாக 2x2 சதுர அடி பரப்பளவு கொண்ட சூரியப்பலகைகளை தூணில் பொருத்தி சூரியக் கதிர்களை உள்வாங்க வைக்கவேண்டும். இரும்பு மரத்தின் நீளம் 50 முதல் 70 அடி வரை இருக்கலாம்.அடித்தளம் 2x2 அல்லது 3x3 சதுர அடி இருக்கலாம். 40 முதல் 50 சூரியப்பலகைகளை இரும்புத்தூணைச் சுற்றிலும், கிளைகள் அமைத்து அதனுள்ளும் பொருத்தலாம். சூரியப்பலகைகள் அதிக அளவு சூரியக் கதிர்களை உள்வாங்குவதற்கு ஏற்றாற்போல அமைக்கவேண்டும்.செயற்கை சூரிய மரங்கள் மூலம் புவிக்கு எந்தவொரு தீங்கும் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க முடியும்.
5. இரவில் விண்மீன்கள் கண் சிமிட்டுகின்றன அல்லவா! உண்மையில் அவை கண் சிமிட்டுவதில்லை.அதுவும் ஒரு மாயத்தோற்றந்தான்!அதேபோல பறக்கும்தட்டு என்பதும் கோள்களின் ஒரு மாயத்தோற்றந்தான். இந்த மாயத்தோற்றங்களைக் கொடுப்பதில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் முதலிடம் வகிக்கின்றன.சில சமயங்களில் வால் வெள்ளிகள் எனப்படும் தூமகேதுக்களும் மாயத்தோற்றங்களைக் கொடுக்கின்றன. இந்த கோள்கள் அவற்றின் சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வருகையில், சூரிய ஒளி அதன்மேல் பட்டுத் தெறிக்க, முகில்களின் இடைஞ்சலும் பகற் பொழுதிலோ,  அந்திவேளையிலோ இந்தக் கோளின் மேல் ஒன்றாக இணைய, அது பல நிறங்களில் தோன்றுவதும் மறைவதும் போல் மாறி மாறி காட்சியளிக்கும். இந்த மாயத்தோற்றந்தான் நாம் பறக்கும்தட்டு என்று நினைத்துக் கொண்டிருப்பவை.


தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

3 கருத்துகள்: