24 ஜனவரி 2012

தெரிந்ததும் தெரியாததும்


தெரிந்ததும் தெரியாததும்(பகுதி-2)


மனித மேம்பாட்டுக் குறியீடு என்றால் என்ன?

          சுகாதாரம் , கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்கு மக்கள் செலவிடும்  தொகையின் அளவே மனித மேம்பாட்டுக் குறியீடு ஆகும். இத்தொகை அவரவர் வருமானத்தைப் பொருத்தே அமையும். வளர்ந்த நாடுகளில் இக்குறியீடு மிகவும் உச்சத்தில் உள்ளது.

மனித மேம்பாட்டுக் குறியீடு நம்ம ஊரில் எப்படியிருக்கிறது?   
      மனித மேம்பாட்டுக் குறியீட்டில் சென்னை மாவட்டம் (0.842) புள்ளிகளுடன் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தருமபுரி(0.656), கிருஷ்ணகிரி(0.665), விழுப்புரம்(0.667) முதலிய மாவட்டங்கள் கடைசியில் உள்ளன.ஒரு புள்ளியைப் பெற்றால் அந்த மாவட்டம் சிறந்த மாவட்டமாக கருதப்படும். நம்ம நாகை மாவட்டம் (0.738) புள்ளிகள் பெற்றுள்ளது.
தனிநபர் வருமானம் நம்ம ஊரில் எப்படியிருக்கிறது?
முதலிடத்தில் உள்ள சென்னையில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.5,496.88 ஆகவும், வறுமை சதவீதம் 10.2 ஆகவும் உள்ளது.தொழில் வளர்ச்சி பெற்ற தூத்துக்குடியில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.3,928.26 ஆகவும், வறுமை சதவீதம் 35.00 ஆகவும் உள்ளது.  நாகை மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2576/- ஆகவும், வறுமை சதவீதம் 10.9 ஆகவும்  உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2341/- ஆகவும், வறுமை சதவீதம் 16.6 ஆகவும்  உள்ளது. { நம்ம ஊரு கிராம நிர்வாக அதிகாரிகிட்ட போயி  ஆண்டு வருமானம் ரூ.2341/- என்று சொல்லி வருமானச்சான்று கேட்டால் கொடுப்பாரா? ஆனால் அது தான் நிஜம் என்று மத்திய அரசின் புள்ளியியல் துறை சொல்லுதுங்கோ!}  தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற வடமாவட்டங்களில் வறுமை 45 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
விவசாயத்தை விட்டுடாதிங்க!
                 நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வறுமை சதவீதம் குறைவாக இருப்பதற்கு காரணம் விவசாயம் தான். தொழில் வளர்ச்சி பெற்றுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் வறுமை சதவீதம் மிகுதியாக உள்ளது.இதிலிருந்து என்ன புரியுது? தொழில் வளர்ச்சியால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயன் பெறுகின்றனர்.{பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆவான் அவ்வளவுதான்!}ஆனால் விவசாயம் செய்வோரின் ஆண்டு வருமானம் குறைவாக இருந்தாலும், வறுமை அதிகமாக இல்லை. வடமாவட்டங்களில் தொழிலும் இல்லை, விவசாயமும் இல்லை.அதனால்தான் வறுமை அதிகமாக உள்ளது.
---------------நன்றி - தினமணி --------





தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

1 கருத்து:

  1. விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாய் மாறி, விவசாயமும் கு(ம)றைந்து போச்சே!

    பதிலளிநீக்கு